Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th August 2017 11:03:39 Hours

53 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதி பதவியேற்பு

தம்புள்ள,இணாமலுவ பிரேதேசத்தில் அமைந்துள்ள 53ஆவது படைப்பிரிவிட்கு புதிய படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி அவர்கள் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எழிமையான நிகழ்வின்போது தமது பதவியை பொறுப்பேற்றார்.

வருகை தந்த படைத் தளபதிக்கு 53 ஆவது படைப் பிரிவினரால் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பதவியை பொறுப்பேற்ற படைத்தளபதி மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி அவர்கள் உத்தியோக பூர்வமாக தனது கடமையை ஆரம்பித்ததுடன் ஆவணங்கள் சிலவற்றுக்கும் கையொப்பமிட்டார். அந்த சந்தர்ப்பத்தில் படைப்பிரிவு வளகத்தில் மரம் கன்று ஒன்றையும் நற்றுவைத்தார்.

இந் நிகழ்வில் 53ஆவது படைப்பிரிவின் இராணுவ அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், மற்றும் இராணுவ படையினர் உட்பட ஏனைய பதவி நிலை அதிகாரிகளும் கலந்து கொண்டன.

Sports Shoes | Women's Designer Sneakers - Luxury Shopping