06th February 2024 15:33:10 Hours
76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 52 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யகம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 523 காலாட் பிரிகேட்டினரால் 04 பெப்ரவரி 2024 அன்று 7 வது விஜயபாகு காலாட் படையணியில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் பிராந்திய இரத்த நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், சிப்பாய்கள், வைத்தியர்கள் இரத்ததானம் செய்தனர். பங்குபற்றிய அனைவருக்கும் நாவற்குழி விகாரையின் பிரதம தேரர் மற்றும் சாவகச்சேரி வர்த்தக சங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.