18th August 2023 19:06:02 Hours
52 வது காலாட் படைப்பிரிவின் 522 வது காலாட் பிரிகேட் படையினரால் 2023 ஓகஸ்ட் 15 கட்டைக்காடு புனித மரியாள் தேவாலயத்தில் வருடாந்த நிகழ்வுகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு முன்னதாக, படையினரால் தேவாலய வளாகம் அலங்கரிக்கப்பட்டதுடன் குடிநீர் வசதிகள் மற்றும் தற்காலிக மின் விளக்குகள் படையினரால் வழங்கப்பட்டன.
பிரதேசத்திலுள்ள சமூகத்தினருடன் நல்லுறவைப் பேணும் வகையில், தேவாலயத்திற்கான உதவிகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் ஆசீர்வாதத்துடன் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களால் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக 522 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்கேடி பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் கலந்து கொண்டதுடன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.