20th February 2024 12:40:44 Hours
521 வது காலாட் பிரிகேட் படையினர் பொதுமக்களுடன் இனைந்து 17 பெப்ரவரி 2024 அன்று சற்கோட்டை கரையோரப் பகுதியில் சிரமதானப் பணியை மேற்கொண்டனர். 521 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்எச்ஆர் பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டு முயற்சியானது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சமூகப் பொறுப்புணர்வைத் தூண்டுவதுடன் சுத்தமான சூழலை உருவாக்குவதையும் தூண்டுகிறது. இத்திட்டத்தின் மூலம் படையினர் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டினர்.