Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2023 19:30:24 Hours

521 வது காலாட் பிரிகேட் படையினரால் வரணி மத்திய கல்லூரி கட்டிடம் புணரமைப்பு

யாழ். வரணி மத்திய கல்லூரியின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, 52 வது காலாட் படைப்பிரிவின் 521 வது காலாட் பிரிகேட் படையினர் கடந்த மே மாதம் 17 ஆம் திகதி பாடசாலை கட்டிடமொன்றை புணரமைத்து பிள்ளைகளிடம் கையளித்தனர்.

5 வது இராணுவ பொறியியல் சேவைகள் படையணி, 15 வது (தொ) கஜபா படையணி மற்றும் 11 வது விஜயபாகு காலாட் படையணிகளின் படையினர், கல்லூரியால் வழங்கப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டு இரண்டு மாதங்களுக்குள் பாடசாலை கட்டிடத்தை சீரமைக்க தங்கள் மனித வளத்தை வழங்கினர்.

இராஜாங்க கல்வி அமைச்சர் எஸ் அரவிந்த குமார், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிபிஎஸ்என் போத்தொட்ட, 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேபீஎஸ்ஏ பெர்னாண்டோ, 521 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எம்எச்ஆர் பெர்னாண்டோ, திட்ட இணைப்பாளர் திரு. டி செல்வகுமார், அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சம்பிரதாய கையளிப்பு நிகழ்வின் கலந்து கொண்டனர்.