Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th May 2023 23:12:48 Hours

521 வது காலாட் பிரிகேட் படையினரால் அனுசரணையாளர்களின் உதவியுடன் யாழ். வறிய குடும்பங்களுக்கு உதவி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது படைப் பிரிவின் 521வது காலாட் பிரிகேட் படையினரால் யாழ்.குடாநாட்டின் அச்சுவேலி, வல்லை, உரிக்காடு பகுதிகளில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு அனுசரணையாளர்களின் உதவியுடன் மே 12 ஆம் திகதி உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

521 வது காலாட் பிரிகேட் தலைமையக வளாகத்திற்கு வரவழைத்து இவ் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பொதியிலும் 3500/= பெறுமதியான அரிசி, பருப்பு, மசாலா, தானியங்கள், பால் மா போன்றவை உள்ளடக்கப்பட்டிருந்தன.

இத் திட்டமானது யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பு மூலம் 521 காலாட் பிரிகேட் தளபதி கேணல் எச்எம்ஆர் பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய முன்னெடுக்கப்பட்டது.