Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th August 2021 16:30:15 Hours

521 வது பிரிகேட் ஆண்டுவிழாவினையிட்டு ஏழைகளுக்கு உலர் உணவுகள் வழங்கல்

521 வது பிரிகேட் படையினர் வெள்ளிக்கிழமை (20) 26 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உரிக்காடு பகுதியில் வசிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 குறை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை விநியோகித்தனர்.

தலா 3000 ரூபா பெறுமதியான அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் மா, உப்பு, தேயிலை, வெங்காயம் போன்றவற்றை உள்ளடக்கிய உலர் உணவு பொதிகள் 521 வது பிரிகேட் மற்றும் 11 விஜபாகு காலாட்படை படைப்பிரிவினரால் வழங்கி வைக்கப்பட்டன.

கொவிட் -19 பரவுவல் தடுப்புக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் வீடுகளை விட்டு நகர முடியாமல் இருப்பதால் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்ப்பட்டன.

521 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மஹேன் சல்வத்துர அவரது பணியாளர்களுடனும் 11 வது விஜயபாகு காலாட் படையின் கட்டளை அதிகாரி மேஜர் என்.ஆர்.என்.டி.நிஷ்யங்க தனது படையினருடனும் இந்த நிகழ்ச்சியில் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி பங்கேற்றனர்.