19th January 2025 10:42:20 Hours
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், 52 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், 521 வது காலாட் பிரிகேட், பொதுமக்கள் மற்றும் இராணுவ சமூகங்களுக்கு இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்தும் அதே வேளையில் இளைஞர்களிடையே நல்லெண்ணம், ஒற்றுமை மற்றும் விளையாட்டுத் திறனை வளர்க்கும் நோக்கில் ஒரு காற்பந்து போட்டியை ஏற்பாடு செய்தது.
இந்தப் போட்டி 2025 ஜனவரி 11, அன்று 521 வது காலாட் பிரிகேட் மைதானத்தில் ஆரம்பப் போட்டிகளுடன் ஆரம்பமாகியதுடன் மேலும் 2025 ஜனவரி 16 அன்று, 52 வது காலாட் படைப்பிரிவு பகுதிக்குள் உள்ள நெல்லியடியில் உள்ள கொலின்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டிகளுடன் நிறைவடைந்தது.
ஒரு அற்புதமான இறுதிப் போட்டியில், 523 வது காலாட் பிரிகேடினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட கொடிகாமம் காற்பந்து கழக அணி, 521 வது காலாட் பிரிகேடினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட வடமராட்சி காற்பந்து கழகத்தை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
பிரதம விருந்தினராக, 522 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.கே.எஸ்.பீ.எம்.ஆர்.ஏ.பி. தொடம்வெல கலந்து கொண்டு இறுதிப் போட்டிகளுக்கு தலைமை தாங்கியதுடன் இதில் சிரேஷ்ட அதிகாரிகள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செல்லமுத்து டெக்ஸ்டைல்ஸ், ஹோட்டல் வைட் டவர், டி20 ஸ்போர்ட்ஸ், குப்புது ஹோட்டல் மற்றும் கொழும்பு டெக்ஸ் உள்ளிட்ட உள்ளூர் அனுசரனையாளர்களின் ஆதரவு போட்டியின் வெற்றிக்கு பங்களித்தது.