21st May 2024 18:56:56 Hours
52 வது காலாட் படைப்பிரிவு, 521 வது காலாட் பிரிகேட் மற்றும் 4 வது இலங்கை சிங்க படையணி படையினர் இணைந்து பருத்தித்துறை கற்கோவளம் யா/ மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் கல்வி சுற்றுலாவினை ஏற்பாடு செய்தனர்.
சாக்கோட்டை முனை மற்றும் பலாலி சர்வதேச விமான நிலையத்தை பார்வையிடும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. காங்கேசன்துறை கடற்கரையில் ஒரு பொழுதுபோக்கு ஒன்று கூடுதல் உற்சாகத்தை அளித்தது. இச்சுற்றுலா காங்கேசன்துறையில் இருந்து கொடிகாமம் வரையிலான ஒரு மறக்கமுடியாத ரயில் பயணத்தையும் உள்ளடக்கியிருந்தது, இது பல மாணவர்களுக்கு முதல் அனுபவமாகும்.
மேலும், யாழ்ப் பாதுகாப்பு படைத் தலைமையகம் அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் மதிய உணவு வழங்கியது. அதற்கமைய, பாடசாலை ஊழியர்கள் தனித்துவமான மற்றும் வளமான அனுபவங்களுக்குத் தங்கள் மனப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்.