Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2021 17:30:02 Hours

52 வது படைப்பிரிவின் புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்கிறார்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 52 வது படைப்பிரிவின் 27 வது தளபதியாக பிரிகேடியர் சமந்த விக்ரமசேன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை (28) மிருசுவில் பகுதியில் உள்ள 52 வது படைப்பிரிவு தலைமையகத்தில் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.

புதிதாக நியமனம் பெற்றுக்கொண்ட தளபதி படைப்பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த போது படைப்பிரிவின் பதவி நிலை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதோடு சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. அதனையடுத்து பிரிகேடியர் சமந்த விக்ரமசேன பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கைசாத்திட்டார்.

அதனையடுத்து படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த தளபதி தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதன் பின்னர் சிப்பாய்களுக்கான உரையொன்றையும் நிகழ்த்தினார். பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.