Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2025 10:51:05 Hours

52 வது காலாட் படைப்பிரிவினால் சுற்றுச்சூழல் சுத்தம் செய்யும் திட்டம்

‘தூய இலங்கை திட்டத்தின்’ ஒரு பகுதியாக, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் 2025 ஜனவரி 30 ம் திகதி சிரமதான திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டம் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது.

521, 522, மற்றும் 523 வது காலாட் பிரிகேட்களின் படையினர், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து, சாவகச்சேரி நகர சபைப் பிரதேசத்தை சுத்தம் செய்தனர். இத்திட்டத்தில் குப்பைகளை அகற்றுதல் மற்றும் சாலையோர சுத்தம் செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த முயற்சி 250 இராணுவ வீரர்கள் மற்றும் 300 பொதுமக்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது.

மதகுருமார்கள், அரச அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.