Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd January 2025 19:22:42 Hours

52 வது காலாட் படைப்பிரிவினால் கடற்கரை தூய்மையக்கல்

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 'தூய இலங்கை திட்டத்தின்' ஒரு பகுதியாக, யாழ். பாதுகாப்புப் படை தலைமையக படையினயினரால் தூய்மையக்கல் நிகழ்வென்று யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் தலைமையில் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வீ.டி.எஸ். பெரேரா அவர்களின் மேற்பார்வையில் 2025 ஜனவரி 22 ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டது.

521,522 மற்றும் 523 வது காலாட் பிரிகேட் படையினருடன் தாழையடி கடற்கரையின் இயற்கை அழகை மீட்டெடுப்பதற்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் மருதங்கேணி பிரதேச செயலகம், மருதங்கேணி பிரதேச சபை, மருதங்கேணி வைத்தியசாலை, செம்பியன்பற்று பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம், இலங்கை கடற்படை மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கைகோர்த்தனர்.

"அழகான நாடு, புன்னகைக்கும் மக்கள்" என்ற கருப்பொருளின் கீழ் 250 பொதுமக்களின் பங்கேற்புடன் 350 இராணுவ வீரர்களால் மேற்கொள்ளப்பட்ட "தூய இலங்கை" முயற்சிக்கு இந்த கூட்டு முயற்சி ஒரு பெருமைமிக்க பங்களிப்பாகும். இந்த முயற்சி கடற்கரையை சுத்தம் செய்வதை மட்டுமல்லாமல், சுத்தமான மற்றும் அழகான கடலோரப் பகுதியைப் பாதுகாப்பதற்காக பங்கேற்பாளர்களிடையே பொறுப்புணர்வு உணர்வை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

மதகுருமார்கள், அரச அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.