Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2021 10:00:39 Hours

513 வது பிரிகேட் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தினை முன்னிட்டு குழந்தைகள் உபசரிப்பு

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவின் 513 வது பிரிகேட்டின் 26 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோப்பாய் கனம் சிறுவர் இல்லத்தில் வியாழக்கிழமை (26) அனாதை குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட மதிய உணவு பொதிகளை பகிர்ந்தளித்தனர்.

இருபத்தி நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பதினாறு நிர்வாக ஊழியர்கள் இந்த விருந்தை அனுபவித்தனர், இது மக்களுக்கும் படையினருக்கும் இடையே சிறந்த உறவை வளர்க்கக்கூடிய ஒரு சமூக நல திட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் -19 தொற்றுநோய் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலைகளில் அந்த குழந்தைகளின் மன நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்தவும் பராமரிக்கவும் இந்த தொண்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

513 பிரிகேட் தளபதி பிரிகேடியர் முகமது ஃபரிஸ் , சிவில் விவகார அதிகாரி மற்றும் 513 பிரிகேட்டின் சில சிப்பாய்கள் சுகாதார முறைகளை கடைபிடித்து விருந்து வழங்கலில் இணைந்துக் கொண்டனர்.