Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st August 2021 08:00:36 Hours

511 வது பிரிகேட் படையினரால் வறிய குடும்பத்திற்கு புதிய வீடு

இலங்கை அமெரிக்க மிஷனரி தேவாலயத்துடன் இணைந்து குபேரியா சங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாணம், உடுவில் தெற்கு பகுதியின் ஒர் ஏழை குடிமகனுக்கு புதிய வீடு கட்டும் பொறுப்பை யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக்த்தின் 51 வது டைப்பிரிவின் 511 வது பிரிகேட்டின் 9 வது(தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையினர் ஏற்றுள்ளனர்.

இராணுவத் தளபதியின் எண்ணக்கரு வழிகாட்டுதலின் பேரில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்களும் தற்போது உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்களின் நிதியுதவியில் தனது .தொழில்நுட்பம் மற்றும் மனித வளங்களை கொண்டு ஆதரவற்ற குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதில் ஈடுபட்டுள்ளன.

வியாழக்கிழமை ( 19) யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவாக்கு, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகளுடன் தனது குழந்தைகளுடன் வறுமையில் வாழும் அமிதமலர் மகேந்திர ராசா அவர்களுக்கான வீட்டை நிர்மாணிக்க அடிக்கல் நாட்டி வைத்தார்.

51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்களும் தொடக்க நிகழ்வின் போது கலந்துக் கொண்டார்.