18th February 2024 20:24:16 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் சில சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 16) புனித லூக மெதடிஸ்ட் முதியோர் இல்லத்தில் உள்ள 22 முதியவர்களுக்கு மதிய உணவை வழங்கினார்.
511 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டலின் கீழ் 511 வது காலாட் பிரிகேட் மற்றும் 15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந் நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.