04th March 2023 21:20:33 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவு படையினர் பாதுகாப்புப் படையினருக்கும் யாழ் கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையில் நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் பெப்ரவரி 18-19 ஆம் திகதிகளில் யாழ். கோப்பாய் 51 வது காலாட் படைப்பிரிவு விளையாட்டு மைதானத்தில் நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்தனர்.
இப் போட்டிகளில் இராணுவ கிரிகெட் அணியுடன் ஐந்து சிவில் கிரிக்கெட் அணிகள் இணைந்து போட்டியிட்டன.
ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று கோண்டாவில் மறுமலர்ச்சி அணியும், பன் பிரதர்ஸ் அணியும் இறுதிப் சுற்றுக்குத் தகுதி பெற்றன.
கோண்டாவில் மறுமலர்ச்சி அணி 7 விக்கெட்டுக்கு 79 ஓட்டங்களைப் பெற்று கொண்டது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பன் பிரதர்ஸ் அணி 60 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த வகையில் கோண்டாவில் மறுமலர்ச்சி அணி சாம்பியனாது.
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.பி வெலேகெதர பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதி போட்டியினை பார்வையிட்டதுடன் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் ,சிப்பாய்கள் மற்றும் பார்வையாளர்கள் இப் போட்டியினை கண்டுகளித்தனர்.
பின்வரும் வீரர்கள் தனிப்பட்ட முறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகப் பாராட்டப்பட்டனர்.
சிறந்த பந்து வீச்சாளர் - சச்சித் - பன் பிரதர்ஸ் அணி
சிறந்த துடுப்பாட்டவீரர் - குஜாத் - மறுமலர்ச்சி அணி
ஆட்ட நாயகன் - கிருஷ்ணதீபன் - மறுமலர்ச்சி அணி