26th May 2024 18:14:33 Hours
51 வது காலாட் படைப்பிரிவு 2024 மே 23 வெசாக் போயா தினத்தன்று யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் வழிகாட்டுதலுடன் ஸ்ரீ நாக விகாரையை மையப்படுத்தி வருடாந்த வெசாக் கொண்டாட்டதை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியை அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் கௌரவ.திருமதி பீ.எஸ்.எம். சார்ல்ஸ், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோர் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஜேகே விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள சமூகத்தினரின் பங்களிப்புடன் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.
மேலும் இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் திரு.எல்.இளங்கோவன், பதில் மாவட்ட செயலாளர் திரு.எம்.பிரதீபன், யாழ்.மாவட்ட செயலாளர் திரு.கலிங்க ஜெயசிங்க, யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படையினர், பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்விற்கு வண்ணம் சேர்க்கும் வகையில் 51 வது காலாட் படைப்பிரிவு அதன் பிரிகேட் மற்றும் படையலகுகளுடன் ஸ்ரீ நாக விகாரைக்கு முன்பாக ஆரியகுளம் ஏரியைச் சுற்றி அலங்கரம் மற்றும் வண்ணமயமான வெசாக் கூடுகளை ஏற்பாடு செய்திருந்தது.
51 வது காலாட் படைப்பிரிவின் கீழ் உள்ள அனைத்துப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் தான நிகழ்வில் அப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 4000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சுவையான உணவு வழங்கப்பட்டது. அத்துடன், 512 வது காலாட் பிரிகேட், 512 வது காலாட் பிரிகேடினரின் பங்கேற்புடன் நெஸ்கஃபே வெசாக் தானத்தினை ஏற்பாடு செய்தது.
கௌதம புத்தரின் ஞானோதயத்தை குறிக்கும் வகையில் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் பக்தி பாடல் குழுக்களின் பங்கேற்புடன் வெசாக் பாடல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.