Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th December 2024 17:59:18 Hours

51 வது காலாட் படைப்பிரிவினரால் சிமிக் பூங்காவில் நத்தார் பண்டிகை கொண்டாட்டம்

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்எ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 12 டிசம்பர் 2024 அன்று 2024 க்கான நத்தார் பண்டிகையை முன்னிட்டு சமூக நிகழ்வுகள் சிமிக் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

மனுசத் தெரண மற்றும் மலிபன் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் (தனியார் நிறுவனம்) ஆகியவற்றுடன் இணைந்து நடாத்தப்பட்ட இந்நிகழ்வு, அப்பகுதி சிறுவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ‘பஞ்சமாமா’ கலாசூரி நாலக ஹபுகொட ஒரு பொழுதுபோக்குத் நிகழ்வை வழங்கினார். பாரம்பரிய அலங்காரங்களான மாட்டு தொழுவம் மற்றும் நத்தார் மரம் பண்டிகையின் உற்சாகத்தை மேம்படுத்தியது. நத்தார் தாத்தா பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார்.

300 பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன், மேலும் 150 மலிபன் பிஸ்கட் பொதிகள் மற்றும் ரூ. 3,000 க்கு பெறுமதியான அழகுசாதனப் பொதிகள் ஒவ்வொன்றும் வழங்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், மனுசத் தெரண மற்றும் மலிபன் பிஸ்கட் தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள், பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.