09th July 2024 19:48:05 Hours
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 51வது காலாட் படைப்பிரிவு மற்றும் யாழ் உரும்பிராய் கனிஷ்ட காற்பந்தாட்ட கல்லூரியுடன் இணைந்து 2024 ஜூலை 6 மற்றும் 7 ம் திகதிகளில் கோப்பாய் 51வது காலாட் படைப்பிரிவின் சிமிக் பார்க் மைதானத்தில் காற்பந்து போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.
இப்போட்டியில் வட மாகாணத்தைச் சேர்ந்த 32 கனிஷ்ட காற்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக 51வது காலாட் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
51வது காலாட் படைப்பிரிவினரால் இப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. இரண்டாவது சுற்றுக்கு எட்டு அணிகள் தெரிவு செய்யப்பட்டன. போட்டிகளை சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், கிராம மக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்டுகளித்தனர்.