Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2021 09:15:07 Hours

51 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் கிறிஸ்மஸ் தினத்தில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

இரக்கம் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற நத்தார் பண்டிகையின் சிறப்பம்சங்களை வலியுறுத்தும் வகையில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51வது படைப்பிரிவினால் நன்கொடையாளர்களின் நிதி உதவியை கொண்டு கிறிஸ்மஸ் தினம் (25) 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்களினால் 150 மாணவர்களுக்கான காலணிகளை வழங்கி வைக்கும் திட்டத்தின் அடையாள அம்சமாக 50 மாணவர்களுக்கு காலணிகள் 51 முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் 512, 513 மற்றும் 515 வது பிரிகேடுகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் வறிய மாணவர்களுக்கு அந்தந்த பிரிகேடிகளுக்கு அழைப்பிக்கப்பட்டு எஞ்சிய 100 சோடி காலணிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இராணுவத்தின் ‘முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020-2025’ க்கு அமைய 51 வது படைப்பிரிவினால் சிவில் இராணுவ ஒத்துழைப்பு திட்டங்களின் கீழ் நன்கொடையாளர்களின் நிதி உதவியில் மேற்படி சமூக திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

செல்வபுரம், யோகபுரம் மற்றும் கோப்பாய் பிரதேசங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுடன் வருகைதந்து உதவிகளை பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

படைப்பிரிவு தளபதியின் கோரிக்கைக்கு அமைவாக மல்லிகா ஹேமச்சந்திர ஜூவல்லர்ஸ் தனியார் நிறுவனத்தின் திரு தம்மிக்க இந்திரசிறி, திருமதி மது சேனாரத்ன மற்றும் கேணல் ஷிராந்த மில்லாகல ஆகியோரால் காலணிச் சோடிகளுக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க மற்றும் திருமதி பிரியங்கா விக்கிரமசிங்க, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் படைப்பிரிவு பணியாளர்கள் , அதிகாரிகள் ஆகியோரும் 51 படைப்பிரிவு தலைமையத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.