Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th July 2021 13:00:13 Hours

51 வது படைப்பிரிவினரால் டெங்கு நோய் பரவக்கூடிய பகுதிகளில் தூய்மையாக்கல் பணிகள் முன்னெடுப்பு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவின் 511 மற்றும் 513 வது பிரிகேட் படையினரால் 11 ஜூலை 2021 அன்று மூன்று வழிபாட்டுத்தலங்களில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய பகுதிகளை தூய்மைப்படுத்துவதற்கான சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த திட்டத்தின் போது, கட்டபொக்கணை பிள்ளையார் கோயில் வளாகம், கோப்பாய் சூசையப்பர் தேவாலய வளாகம் மற்றும் வித்தகம்புரத்தில் உள்ள வைரவா் கோயில் ஆகிய பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டன. 511 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜூட் பெர்ணான்டோ மற்றும் 513 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மொஹமட் பாரிஸ், ஆகியோரால் மேற்படி பணிகள் மேற்பார்வை செய்யப்பட்டன.

9 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினர், 16 வது கெமுனு ஹேவா படையினர் மற்றும் 15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி குறித்த திட்டத்தில் பங்கெடுத்தனர்.

அதேநேரம் 513 வது பிரிகேடின் 11 வது இலேசாயுத காலாட் படையினர் அராலி் கலவத்துறை ஞான வைரவர் கோவில் வளாகம் சிப்பாய்களின் பங்கேற்புடன் 513 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மொஹமட் பாரிஸ் அவர்களின் மேற்பார்வையில் துப்பரவு பணி நடைபெற்றது.

51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல ஆகியோரின் ஆசிர்வாதத்துடன் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.