Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th November 2021 20:04:30 Hours

51 வது படைபிரிவினரால் பலாலி இராணுவப்பண்ணையில் 800 தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டன

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மர நடுகை வேலைத்திட்டதிற்கு அமைவாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவினரால் 12 ஏக்கர் நிலப்பரப்பில் 800 தென்னங்கன்றுகளை நாட்டி வைக்கும் வேலைத்திட்டம் புதன்கிழமை (3) பலாலி இராணுவ பண்ணையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ். குடாநாட்டிற்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் அவர்களால் “துரு மித்துரு நவ ரட்டக் வேலைத்திட்டத்திற்கு” அமைவாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களின் முன்னிலையில் மரகன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அதற்கமைய இன்றைய தினம் வரையில் யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதிகளாக நியமனம் வகித்தவர்களின் வழிகாட்டலின் கீழ் தலைமையக வளாகத்தில் 7000 மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளதோடு, மர நடுகையின் ஆரம்ப நிகழ்வினை தொடர்ந்து படையினரால் மர நடுகைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

51 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி தென்னங்கன்று நடுகைக்கான நிகழ்வுகளின் போது, ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் அப்பகுதியில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு 50 உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதேநேரம் தென்னை மற்றும் பனை மரக் கன்றுகளும் தளபதியவர்களால் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.