Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th July 2024 08:42:25 Hours

51 வது காலாட் படைப்பிரிவினால் 14 வயதிற்கு கீழ் பட்டவர்களுக்கான காற்பந்தாட்ட போட்டி

51 வது காலாட் படைப்பிரிவு 32 கனிஷ்ட காற்பந்து அணிகளின் பங்கேற்புடன் 6 மற்றும் 7 ஜூலை 2024 அன்று 51 காலாட் படைப்பிரிவு தலைமையக சிமிக் பூங்காவில் 14 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான காற்பந்து போட்டியை நடத்தியது.

இறுதிப்போட்டியில் கிளிநொச்சி ஈகிள் கனிஷ்ட காற்பந்த அணி யாழ்ப்பாணம் குருநகர் சென்ராக் அணியை எதிர்த்து போட்டியிட்டதுடன் குருநகர் சென்ராக் அணி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் ரூ.50,000.00 ரொக்கப்பரிசில் ஆகியவற்றை வெற்றி பெற்ற குருநகர் சென்ராக் அணிக்கு வழங்கி வைத்தார்.

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயது காற்பந்தாட்ட வீரரான திரு.சின்னமோன் செல்வரத்தினம் அவர்களுக்கும் இந்தப் போட்டியின் மூலம் மரியாதை செலுத்தப்பட்டது.