09th October 2024 17:37:12 Hours
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினரால் இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 2024 ஒக்டோபர் 07 ஆம் திகதி காங்கேசன்துறை கடற்கரையில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இம் திட்டத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பொலிஸார், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், வலிகாமம் பிரதேச சபை ஊழியர்கள் உட்பட 100 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.