10th May 2023 17:40:33 Hours
யாழ் குடாநாட்டின் அனைத்துப் படைப்பிரிவுகளின் ஏற்பாட்டில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவினர் வெசாக் ஏற்பாடுகளை வெசாக் தினத்தன்று (மே 5) யாழ். ஸ்ரீ நாக விகாரையில் ‘புத்த பூர்ணிமா’ கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர்.
அன்றைய நிகழ்ச்சிகள் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி வண. மீகஹஜந்துரே சிறிவிமல தேரர் அவர்களால் நடத்தப்பட்ட‘போதி பூஜை’யுடன் தொடங்கியது.
வெசாக் நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டதுடன் ஏனைய அழைப்பாளர்களும், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, 51 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபீ வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ மற்றும் முப்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அழைப்பின் பேரில் கலந்து கொண்ட பிரதம அதிதி விகாரை வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ‘வெசாக்’ கூடுகள், மற்றும் அலங்காரங்களை ஒழியூட்டி ஆரம்பித்தார். வடமாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா, யாழ். மாவட்ட செயலாளர் திரு ஏ சிவபாலசுந்தரன், பொலிஸ், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
யாழ். பல்கலைக்கழக இளங்கலை மாணவர்கள் மற்றும் மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து வழங்கிய பக்தி கீதம் பெருந்திரளான பொதுமக்கள் முன்னிலையில் இடம் பெற்றது.
அன்றைய ஏற்பாடுகளின் இறுதியாக, சிறப்பு அழைப்பாளர்கள் அன்னதானத்தை ஆரம்பித்து வைத்தனர். 3000க்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்றுக் கொண்டனர். பாதிரியார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு விஷேட ஏற்பாடுகளும் காணப்பட்டதுடன் படையினரால் அனைவருக்கும் உணவு மற்றும் தண்ணீரும் வழங்கப்பட்டது.
வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி, வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதி பிரிகேடியர் எஸ்ஏ பத்திரன ஆர்எஸ்பீ, யாழ் குடாநாட்டிலுள்ள சிரேஷ்ட முப்படைகள் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் என பலர் கலந்து கொண்டனர்.