29th July 2017 10:01:05 Hours
இலங்கை இராணுவத்தின் 51ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெள்ளிக் கிழமை (28) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றார்.
பௌத்தமத குருக்களின் ஆசிர்வாதத்துடன் தனது கடமையை பொறுப்பேற்று பின்பு உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றார். அத்தருணத்தில் இராணுவ தளபதி வருகை தந்து பதவி நிலை பிரதானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் கே.ஏ.டீ.ஏ கருணாசேகர ஆர்டப்ள்யூபீ,ஆர்எஸ்பி,விஎஸ்வி , யூஎஸ்பி,என்டீயூ,பிஎஸ்சி இவர் இந்த பதவிக்கு நியமிப்பதற்கு முன்பு சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லுாரி கட்டளை அதிகாரியாக கடமை வகித்தார். தற்பொழுது இவர் இலங்கை இலேசாயுத காலாட்படையின் 15ஆவது படைத்தளபதி ஆவார்.
மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, 1981ஆம் ஆண்டு கெடெற் அதிகாரியாக இராணுவத்தில் இணைந்து தியதலாவை இராணுவ எகடமியில் பயிற்சியை முடித்துக்கொண்டு 1984ஆம் ஆண்டு இரண்டாம் லெப்டினன்ட் தரத்தில் இலங்கை இலேசாயுத காலாட்படையில் இணைந்தார். தற்பொழுது தனது சேவையை 35வருடங்கள் பூர்த்தியாக்கியுள்ளார்.
மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர,உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
இந்தியா,பங்களாதேசம்,பாகிஸ்தான்,அமெரிகா,இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் தனது பயிற்சிகளை முடித்துள்ளார். மேலும் இந்தியா மதுராசி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் தந்திர உபயோகமான கல்வி பட்டங்களையும்,சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பாக குலபதி பட்டத்தையும்,சீனாவில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கற்கை நெறிகளையும் முடித்துள்ளார்.
இவர் கட்டளை அதிகாரி மற்றும் விரிவுரையாளராகவும்,இராணுவ புலனாய்வு பணிப்பாளராகவும்,காலாட்படை பணிப்பாளராகவும்,போர்கருவி மாஸ்டர் ஜெனரல் மற்றும் இராணுவ செயலாளர் மற்றும் பதவிநிலை கடமைகளை மேற்கொண்டுள்ளார். அத்துடன் 2004ஆம் ஆண்டு அமைதி காக்கும் பணிகளுக்கு ஹயிடி நாடுகளுக்கும் சென்றுள்ளார்.எல்டிடிஈ பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளிலும் 53ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாகவும்,கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியாகவும்,இராணுவ எகடமியில் விரிவுரையாளராகவும்,சபுகஸ்கந்த கல்லுாரியில் விரிவுரையாளராகவும் கடமை வகித்துள்ளார்.
இவர் புரிந்து விஷேட சேவையினை கௌரவித்து இவருக்கு இரண விக்கிரம பதக்கம் ,இரணசூர பதக்கம்,விசிஷ்ட சேவை பதக்கம், உத்தம சேவை பதக்கம் இராணுவத்தினால் கிடைக்கப்பெற்றுள்ளது. மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கொழும்பு நாலந்தா கல்லுாரி யில் தனது கல்வியை தொடர்ந்துள்ளார். பாடசாலையில் சிறந்த கெடெற் அதிகாரியாக இருந்துள்ளார். அத்துடன் திருமதி தனஞ்ஜனியை திருமணம் முடித்து இவரிற்கு ஒரு மகளும் உள்ளார்.
Authentic Sneakers | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival