13th August 2024 14:09:49 Hours
திரு. இ.எம் ஹேமந்த குமார அவர்களின் அனுசரணையில் வெல்லவாய பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றுக்கு 5 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு 04 ஆகஸ்ட் 2024 அன்று சுருக்கமான நிகழ்வின் போது பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.
5 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியின் முயற்சியால், 5 வது கெமுனு ஹேவா படையணி படையினரின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவள உதவியில் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிஐ மகாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களால் வீட்டுச் திறப்பு பயனாளிக்கு அடையாளமாக கையளிக்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேச மக்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.