12th October 2024 18:20:49 Hours
213 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் 04 ஒக்டோபர் 2024 அன்று தந்திரிமலை விமலஞான மகா வித்தியாலயத்தில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் டிஎஸ்ஐ மூலம் ரூ.3,000.00 மதிப்புள்ள பரிசு வவுச்சர்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி அனுசரணை வழங்கியது.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.