16th September 2024 11:49:00 Hours
சமூக ஆதரவு மற்றும் இராணுவ அர்ப்பணிப்பின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக, இராணுவத் தளபதியின் கருத்தியல் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 75 வது இராணுவ தினத்தை முன்னிட்டு தந்திரிமலை, மானெல்வெவ பிரதேசத்தின் குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் பணியை 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் பூர்த்தி செய்துள்ளனர்.
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சிகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் 213 வது பிரிகேட் தளபதி கேணல் பீஎம் டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் பூர்த்தி செய்யப்பட்டது.
5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரியான மேஜர் எம்.என்.டி. ஜயசிங்க அவர்கள் மற்றும் அனைத்து நிலையினரும் இணைந்து வீட்டை நிர்மாணிப்பதற்கான தமது பங்களிப்பை வழங்கினர். வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியினால் வீடு வழங்கும் நிகழ்வின் போது அவர்களது கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது.