14th November 2024 12:55:00 Hours
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் உதிஸ்பத்துவவில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களால் 12 நவம்பர் 2024 அன்று பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக வீடு கைளிக்கப்பட்டதுடன் குடும்பத்தினருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்கள் 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயத்தினை மேற்கொண்டார். இதன்போது கட்டளை அதிகாரி, படையணியின் செயற்பாட்டு தொடர்பாக சிரேஷ்ட அதிகாரிக்கு விளக்கமளித்தார். இதைத் தொடர்ந்து பிரிவின் பணிகள் தொடர்பாக விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. அதன் பின்னர், வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி தலைமையக வளாகத்தில் மரக்கன்று நாட்டினார்.
அதிகாரிகளுக்கு அவர் ஆற்றிய உரையில், இராணுவத்தின் பணியின் முக்கியத்துவத்தையும், தேசத்திற்கு சேவை செய்வதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். நிறைவாக குழு படம் எடுத்துகொண்டதுடன், அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புகளை பதிவிட்டார்.