Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th July 2023 21:33:30 Hours

5 வது அமைதிகாக்கும் படைக்குழுவின் புதிய தளபதி பதவியேற்பு

இலங்கை சிங்கப் படையணியின் கேணல் டபிள்யூடபிள்யூஎன்பீ விக்கிரமாராச்சி அவர்கள் செவ்வாய்க்கிழமை (2023 ஜூலை 4) மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் மினுஸ்மா பணிகளில் பணியாற்றுவதற்கான 5 வது அமைதிகாக்கும் படைக்குழுவின் புதிய தளபதியாக காவோ சூப்பர் முகாமில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றார்.

முதலில் தளபதி அவர்கள் மினுஸ்மா பணியின் சார்பில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக போர் வீரர்களின் நினைவு தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் கடமைகளை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக அதிகாரப்பூர்வ ஆவணத்தில் தனது கையொப்பமிட்டார். அதனை தொடர்ந்து தளபதி படையினருக்கு உரையாடியதுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.