Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2023 21:19:10 Hours

5 உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கல்லடி கடற்கரையில் சிரமதானம்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 2023 செப்டம்பர் 27 அன்று ஒரு சமூக திட்டமாக 24 வது காலாட் படைப்பிரிவின் 243 வது காலாட் பிரிகேடின் 32 இராணுவ வீரர்கள் கல்லடி கடற்கரை பகுதியை சுத்தம் செய்தனர்.

படையினர் 05 உழவு இயந்திரங்கள் மூலம் கடற்கரையோரத்தில் உள்ள கழிவுப்பொருட்களை சேகரித்து அதனை அகற்றி நேர்த்தியாக சுத்தம் செய்தனர். 243 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்சிஎஸ் குமாரசிங்க அவர்கள் இத்திட்டத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியதுடன், 243 வது காலாட் பிரிகேடின் பிரிகேட் மேஜர் எச்எம்எஸ்எஸ் திம்புலாகல அவர்களுடன் 30 இற்கும் மேற்பட்ட படையினர் இப்பணியில் ஈடுபட்டனர்.