03rd March 2024 17:17:00 Hours
02 மார்ச் 2024 அன்று வெல்லவாய பிரதேசத்தில் வருணகம மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயை 5 வது கெமுனு ஹேவா படையணி படையினர் விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வருணகம மலை வனப்பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவில் பரவியிருந்த தீயை ஓர் அதிகாரி மற்றும் இருபது இராணுவ சிப்பாய்கள் இணைந்து கட்டுப்படுத்தினர்.
ஏர் மொபைல் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏ.டி ரொட்ரிகோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.