Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th June 2021 11:58:15 Hours

5 வது இலங்கை மகளிர் படையணியினரால் கரிம உர தயாரிப்பு பணிகள் முன்னெடுப்பு

ஜனாதிபதி அவர்களின் கொள்கைத்திட்டத்துக்கமைய கிழக்கு பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன விஜேசூரியவின் உத்தரவிற்கமை, 5 (தொ) இலங்கை மகளிர் படையணியினரால் 160,000 கிலோ கரிம உர உற்பத்தி பணிகள் 2021 மே 16 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்படி திட்டத்துக்காக முகாம் வளாகத்திலிருந்த கழிவுகளையும், உதிர்ந்த இலைகள், புல், சமயலறை கழிவுகள் மற்றும் பிற பொருட்களை கொண்டு மேற்படி உற்பத்தி பணிகளை வெலிக்கந்தவிலுள்ள படை முகாம் வளாகத்தில் ஆரம்பித்தனர்.

2021 மே 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டம் 5 (தொ) இலங்கை மகளிர் படையணியின் கட்டளை அதிகாரியான இலங்கை கவச வாகன படையணியைச் சேர்ந்த மேஜர் எல்.ரத்னபால அவர்களினால் மேற்பார்வை செய்யப்பட்டது.