Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th June 2024 14:00:28 Hours

48வது தேசிய விளையாட்டு போட்டியில் கராத்தேயில் இராணுவ அணிகள் வெற்றி

48வது தேசிய விளையாட்டு கராத்தே போட்டி 2024 ஜூன் 6 முதல் 9 வரை மாத்தறை, கொடவிலவ மாகாண விளையாட்டு வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் 07 போட்டிகளிலும் 05 தங்கப் பதக்கங்கள், 05 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 08 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இராணுவ ஆண்கள் அணி சிறப்பாகச் செயற்பட்டது. இராணுவ மகளிர் அணியும் சிறப்பாக செயல்பட்டு, 1 வெண்கலப் பதக்கத்தை பெற்றுகொண்டது.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ கராத்தே கழகத்தின் தலைவரும் இராணுவ கராத்தே குழுவின் பிரதி தலைவருமான பிரிகேடியர் ஆர்.டி. சல்லே என்டிசீ அவர்களின் மேற்பார்வையில் இந்த அணிகள் பங்குபற்றியிருந்தன.