09th July 2024 19:33:11 Hours
இராணுவ செயலாளரும் பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஐஏஎன்பி பெரேரா ஆர்டப்ளியூபீ யூஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அறிவுப் பகிர்வு அமர்வு 29 ஜூன் 2024 அன்று 4 வது பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் நடைப்பெற்றது.
சிரேஷ்ட அதிகாரிகளின் அனுபவங்களை இளம் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்வதற்கும், முறைசாரா தொடர்புகளை ஊக்குவிப்பதற்கும், இளம் அதிகாரிகள் தங்கள் தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு அறிவுகளை பெறுவதற்கும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பணிப்பகத்தின் பிரதிப் பணிப்பாளர் கேணல் ஜீடப்ளியூஏஎஸ்பி முஹந்திரம்கே யூஎஸ்பீ மற்றும் பொறியியல் சேவைகள் மத்திய பணிமனையின் தளபதி கேணல் என் வணசிங்க எல்எஸ்சி ஆகியோர் தங்கள் நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்த்தால் இது நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக காணப்பட்டது.
திரு. பிரசாத் சுபசிங்க அவர்களால் நடத்தப்பட்ட அதிகாரிகளுக்கான பால்ரூம் நடனப் பயிற்சி அமர்வு, அன்றைய நடவடிக்கைகளுக்கு ஈர்க்கக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான கூறுகளைச் சேர்த்தது.
சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.