19th September 2024 11:00:53 Hours
232 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், ஏறாவூரில் ஒரு ஆதரவற்ற குடும்பத்திற்காக 4வது கெமுனு ஹேவா படையணி படையினரால் ரூபா 2.5 மில்லியன் பெறுமதியான புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு ஓமன் லங்கா மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் தனியார் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் வதனி மோகனசங்கர் மற்றும் ஓமன் சுல்தானட்டின் மிடில் ஈஸ்ட் பெட்ரோலியம் எல்எல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர். சி. மோகனசங்கர் ஆகியோர் அனுசரனை வழங்கினார். இப் புதிய வீடு 16 செப்டம்பர் 2024 அன்று பயனாளிக்கு அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இம்முயற்சியானது புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் டிடியூகே ஹெட்டியாராச்சி (ஓய்வு) ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் சமூக ஊடகங்களில் குடும்பத்தின் அவல நிலையை எடுத்துக்காட்டும் காணொளியை பார்வையிட்டதை தொடர்ந்து குறுகிய காலத்தில் இக் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பாடசாலை செல்லும் முன்று சிறார்கள் மற்றும் ஒரு ஊனமுற்ற பெரியவர் உட்பட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் இப்போது பாதுகாப்பான மற்றும் நிலையான வீட்டைக் கொண்டுள்ளது.
இந் நிகழ்வில், 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ பீ காரியவசம் அவர்களினால் குடும்பத்தாரிடம் அடையாளமாக வீட்டின் திறப்புகள் கையளிக்கப்பட்டன. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேச வாசிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.