21st August 2023 21:52:07 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 232 வது காலாட் பிரிகேடின் 4 வது கெமுணு ஹேவா படையணியின் ஒரு அதிகாரி மற்றும் முப்பது சிப்பாய்களுக்கும் மட்டக்களப்பு உன்னச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 30 இளைஞர்களுக்கும் 'போதைப்பொருள் தடுப்பு' என்ற தலைப்பில் செயலமர்வு உன்னச்சி மீனவர் சங்க மண்டபத்தில் புதன்கிழமை (ஓகஸ்ட் 16) நடாத்தப்பட்டது.
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதுடன், ஏற்றமலை பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபிள் டபிள்யூஏசி வெலகெதர அவர்கள் விரிவுரையை ஆற்றினார்.
4 வது கெமுணு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்பீஐஎச் சேனாநாயக்க அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் கீ்ழ் இச் செயலமர்வு நடைபெற்றது.