Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th February 2024 12:42:49 Hours

4 வது இலங்கை சிங்க படையணியின் காற்பந்து போட்டி - 2024

பொதுமக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை வளர்க்கும் நோக்கில், 4 வது இலங்கை சிங்கப் படையணியினரால் 2023 நவம்பர் 19 ம் திகதி முதல் 25 ம் திகதி வரை காற்பந்து போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வின் இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 04) யாழ். நெல்லியடி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஒரு பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தலா பத்து அணிகள் ஆரம்ப சுற்றுப் போட்டியில் வெற்றிக்காக ஆர்வத்துடன் போட்டியிட்டன.பங்குபற்றியவர்களில் கரவெட்டி பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சமரபாகு நியூட்டன் விளையாட்டுக்கழகம் மற்றும் வதிரி டயமன்ட் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின இறுதியில் வதிரி டயமன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று சம்பியன்ஷிப் பட்டத்தை சுவீகரித்து கொண்டது.

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ , பருத்தித்துறை பிரதேச செயலாளர், பருத்தித்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள், வர்த்தக சங்க தலைவர்கள், கிராம உத்தியோகத்தர், விளையாட்டு கழகங்களின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் இப்போட்டிகளை கண்டுகளித்தனர்.