29th June 2024 22:27:17 Hours
4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கீரகொல்ல மற்றும் அபுலம்பே ஆகிய பிரதேசத்திலுள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகளை 28 ஜூன் 2024 அன்று கீரகொல்ல ஆரம்பப் பாடசாலையில் வழங்கியது.
மேஜர் பீகே வருங்கொடகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், இந்த நிவாரணப் பொதிகள் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
திரு.குமா வீரசூரிய மற்றும் அவரது நண்பர்கள் இந்த திட்டத்திற்கு அனுசரணை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அரச அலுவலர்கள், பொலிஸ் அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.