Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th May 2023 17:06:08 Hours

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிப்பாயினால் 50 க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் காப்பாற்றல்

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கோப்ரல் கேஎம்பிஆர்கேஎல் கருணாரத்ன அவர்களின் அற்புதமான மன உறுதி மற்றும் விரைவான செயற்பாட்டினால் கண்டி - மஹியங்கனை வீதியில் வெள்ளிக்கிழமை (26) காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தினால் தனியார் பேருந்தில் பயணித்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

இவ் விபத்தானது உடுதும்பர பொதுப் பகுதியில் இடம் பெற்றதுடன், பேருந்தின் சாரதி வளைவு பாதையில் பேசிக்கொண்டு வாகனத்தை செலுத்தியமையால் திடீரென சாரதி கதவு வழியாக வெளியே வீசப்பட்ட காரணத்தினால், சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு ஓட்டுனர் இல்லாமல் பேருந்து சென்று இவ் விபரீதம் ஏற்பட்டுள்ளது.

அதன் போது பேருந்தில் இருந்த இராணுவ கோப்ரல் கேஎம்பிஆர்கேஎல் கருணாரத்ன அவர்கள் உடனடியாக சாரதியின் ஆசனத்தில் அமர்ந்து, பிரேக் போட்டு, ஓடும் பேருந்தை சில நொடிகளில் கட்டுப்படுத்தி, பெரும் அனர்த்தத்தை தடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

பதினொன்று மணி நேரத்தில் இந்தத் துணிச்சலான சிப்பாய் அந்த விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பேருந்து தவிர்க்க முடியாமல் 2000-3000 அடி உடுதும்பர பள்ளத்தில் விழுந்து பெரும் சேதத்துள்குள்ளாயிருக்கும். உற்சாகமும் நிம்மதியும் அடைந்த பயணிகள், சிப்பாய் அவரது உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியதால் அவரது துணிச்சலைப் பாராட்டினர்.

காயமடைந்த சாரதியை பொலீசார் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.