Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th August 2024 14:10:07 Hours

4 வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் பெண் பயிலிளவல் அதிகாரி டிகேஏஜீடபிள்யூ சதுரங்கனி வெற்றி

2024 ஆகஸ்ட் 19 முதல் 24 வரை வெனிசுலாவின் கராகஸில் நடைபெற்ற 4 வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பெண் பயிலிளவல் அதிகாரி டிகேஏஜீடபிள்யூ சதுரங்கனி பங்கேற்று, நீளம் பாய்தல் போட்டியில் 5.24 மீட்டர் சாதனையுடன் வெற்றி பெற்றார்.

வளர்ந்து வரும் பெண் தடகள வீராங்கனையான அவர் தற்போது தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி கேடியூ 93 பீ இன் கீழ் தனது தனது மேலதிக இராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

ஒரு தங்கப் பதக்கத்தையும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றிய இலங்கை பயிலிளவல் அணி 4வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் 6வது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்த சர்வதேச சந்திப்பில் இலங்கை அணிக்காக தனது தனிப்பட்ட சாதனைகள் மற்றும் சிறப்பான ஆட்டத்தை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மிகவும் பெருமையாக உணர்ந்தது.

சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பு உலகெங்கிலும் உள்ள இராணுவ வீரர்களிடையே நட்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் போட்டிகள் மூலம் அவர்களை ஒன்றிணைக்கிறது.