Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd August 2024 17:46:48 Hours

4 வது இயந்திரவியல் காலாட் படையணியினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

மறைந்த கோப்ரல் எச்.பீ.என் உதய குமார அவர்களின் குடும்பத்திற்கு 4 வது இயந்திரவியல் காலாட் படையணியின் படையினரால் புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. இப் புதிய வீடு 29 ஜூலை 2024 அன்று மாத்தளை கைகாவலயில் இடம் பெற்ற சிறுநிகழ்வின் போது பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.

4 வது இயந்திரவியல் காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, 4 வது இயந்திரவியல் காலாட் படையணியின் படையினருக்கு வழங்கப்பட்ட அறிவுரைக்கமைய தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவள உதவியைப் பயன்படுத்தி இந்த வீட்டை நிர்மாணிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூபீஎஸ்சீ அவர்களுடன் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியங்கா விக்ரமசிங்க ஆகியோரால் பயனாளிக்கு அடையாளமாக வீட்டு சாவிகையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.