Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd March 2022 17:58:23 Hours

4 வது விஐயபாகு காலாட்படையினரால் “இதயமுள்ள இராணுவம்” சமூகத் பணிகள் ஆரம்பம்

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 523 வது பிரிகேடின் கீழ் சாவகச்சேரியை தளமாக கொண்டமைந்துள்ள 4 வது விஜயபாகு காலாட்படையணியின் சிப்பாய்களினால் தமது 'நல் உள்ளத்தையும்' பெருந்தன்மையையும் வெளிப்படுத்தும் விதமாக தம்புள்ளை வர்த்தகர் சங்கம் மற்றும் பிற தரப்புக்களினால் வழங்கப்பட்ட நிதி உதவிகளை கொண்டு பல்வேறு சமூகப்பணிகள் பெப்ரவரி 26 அன்று படையணி தலைமையக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன்படி படையணி வளாகத்திற்கு அழைப்பிக்கப்படடிருந்த சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 20 கர்பிணி தாய்மாருக்கு குழந்தைகளுக்கான பொருட்கள், மரக்கறி வகைகள் மற்றும் நிவாரண பொருட்கள் அடங்கிய 7000.00 ரூபாய் பெறுமதியான பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அதேநேரம், மட்டுவில் சந்திரமலேஷா பாடசாலையில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர் ஒருவருக்கு ஜப்பானில் வசிக்கும் திரு ருவன் ரத்நாயக்க அவர்களின் நிதி உதவியை கொண்டு 50,000 ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

அதே தினத்தில் படையணிக்குள் சேவையாற்றும் சிவில் ஊழியர்களுக்கான புதிய நிர்வாக கட்டிடமொன்றும் திறந்து வைக்கப்பட்டது.

4 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்ஜீஎஸ் கால்லகே அவர்களின் அழைப்பின் பேரில் 52 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நிகழ்வின் பிரதம அதிதிகாரியாக கலந்துகொண்டிருந்ததோடு, 523 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிசங்க சமரதிவாகர, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தனர்.