Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th August 2021 11:30:35 Hours

4 வது கெமுனு ஹேவா படையினரால் உன்னாச்சி பிரதேச குடும்பத்திற்கு புதிய வீடு

மட்டக்களப்பு உன்னாச்சி பிரதேசத்தின் ஒர் ஏழை குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேட்டின் 4 வது கெமுனு ஹேவா படையினர் வெள்ளிக்கிழமை (27) புதிய வீடுகட்டுவதற்கான அடிக்கல் நாட்டிவைத்தனர்.

இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியினை இராணுவத்தின் வேண்டுகோளின் பேரில் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் முதித்த லான்சக்கார வழங்குவதுடன் அதற்கான நிபுணத்துவ உத்துழைப்பை இராணுவப் படையின்னர் வழங்குவர்.

4 வது கெமுனு ஹேவா படையின் கட்டளை அதிகாரி மேஜர் J.A.M.P குணரத்ன தனது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து சுபவேளையில் புதிய விடு கட்டுவதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த மற்றும்231 வது பிரிகேட்டின் தளபதி கேணல் துலிப் பண்டார ஆகியோரின் வழிகாட்டுதல்களுடன் இந்த சமூக நலத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.