29th August 2023 22:29:07 Hours
232 வது காலாட் பிரிகேட்டின், 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் எஸ்.பீ.ஐ.எச் சேனாநாயக்க பீஎஸ்சீ எல்எஸ்சீ அவர்களின் அனுசரணையில் நலன்புரி திட்டமொன்று, மட்டக்களப்பு கரைவெட்டியாரு விஜிதா பாடசாலையின் 20 மாணவர்களுக்கு புதன்கிழமை (ஓகஸ்ட் 23) பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
232 வது காலாட் பிரிகேட்டின் 4 கெமுனு ஹேவா படையணியின் படையினரால் ஏற்பாடு செய்யபட்ட இந் நிகழ்வில், ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் (தரம் 1-5) மாணவர்களுக்கு தலா 2500 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள், பென்சில்கள், பயிற்சி புத்தகங்கள், வரைபு பென்சில்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் கரைவெட்டியாறு விஜிதா பாடசாலையின் அதிபர் மற்றும் 03 ஆசிரியர்கள், பிள்ளைகளின் 15 பெற்றோர்கள் மற்றும் கெமுனு ஹேவா படையணியின் 4 அதிகாரிகள், 15 சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.