31st August 2023 19:39:44 Hours
திருகோணமலை கிளாப்பன் பேர்க் 4 வது கவச வாகனப் படையணியில் சனிக்கிழமை (ஓகஸ்ட் 26) முதல் 'கவச வாகன தொழில்நுட்பம் மற்றும் தந்திரோபாயங்களில் நவீன போக்குகள்' என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கை நடாத்தியது.
இக்கருத்தரங்கு 4 வது கவச வாகனப் படையணியின் அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுடன், அதே நேரத்தில் நிகழ்வு ஒழுங்கமைத்தல், கல்வி எழுதுதல் மற்றும் ஆராய்ச்சி முன்வைப்பு ஆகியவற்றில் அவர்களுக்கு மிகவும் தேவையான அனுபவத்தை வழங்கியது.
இராணுவச் செயலாளரும், இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யுடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்விற்கு வழிக்காட்டல்கள் வழங்கியதுடன், பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டார்.
4 வது இலங்கை கவக வாகனப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிஎம்விஎம்ஆர் திசாநாயக்க ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் கருத்தரங்கில் உரையாற்றுவதற்கு முன்னர் வரவேற்பு உரை நிகழ்த்தினார். மேலும் அதிகாரிகள் அனைத்து அறிவையும் பெறுதல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அதன்பின்னர், பிரிகேடியர் ஏஎஸ்ஆர் விஜேதாச டபிள்யுடபிள்யுவி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் ஆற்றிய சிறப்புரையுடன் செயலமர்வின் கல்வி அமர்வுகள் விரிவடைந்ததுடன், இது படையலகின் முன்னாள் கட்டளை அதிகாரியான லெப்டினன் கேணல் டிபீஏஎஸ்ஏ விதாரன பீஎஸ்சி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முதல் அமர்வின் போது, மேஜர் கேபிஎஸ்எஸ் பண்டார பீஎஸ்சி, லெப்டினன் டிடீடீஎஸ் சேனாபதி மற்றும் மேஜர் பீஎஸ்கேஎம் ஜெயக்கொடி பீஎஸ்சி, ஆகியோர் 4 வது இலங்கை கவச வாகனப் படையணியின் இரண்டாம் லெப்டினன் டிஜே விஜேசேகர அவர்களின் உதவியுடன் கவச வாகன நவீன போக்குகள், தகவல் அமைப்புகள், கவச வாகன பாதுகாப்பில் நவீன போக்குகள் மற்றும் மொபிலிட்டி பற்றிய அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் தொடர்பில் விரிவுரைகள் நடாத்தப்பட்டன.
கவச வாகன தந்திரோபாயங்களில் நவீன போக்குகள் பற்றி விவாதித்த இரண்டு அமர்வுகள், படையணியின் மற்றொரு அமர்வு முன்னாள் கட்டளை அதிகாரியான கேணல் டபிள்யுஎம்ஐயுபி வீரசேகர யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வின் போது, படையணியின் மேலும் நான்கு அதிகாரிகள் தங்கள் எண்ணங்களையும் கண்டுபிடிப்புகளையும் வழங்கினர்.
முதலில், லெப்டினன் கேணல் யுகேகேடபிள்யூஎம்ஆர்ஏடபிள்யூஐஏபி குலதுங்க பீஎஸ்சி அவர்கள் இரண்டாம் லெப்டினன் ஏஏஎஸ்ஏ அமரசிங்க அவர்களின் உதவியுடன் 'நவீன போர்க்களத்தில் தாக்குதல் நடவடிக்கைகளில் கவச வாகனங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றியதுடன், அதைத் தொடர்ந்து, மேஜர் கேஎம்கே சமரசிங்க, இரண்டாம் லெப்டினன் ஏடிபீ அல்விஸ் அவர்களின் உதவியுடன் தற்காப்பு கவச வாகனம் பற்றி விளக்கினார்.
4 வது இலங்கை கவச வாகனப் படையணியின் படையலகின் செயலமர்வு 2023, பிரிகேடியர் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் ஆர் ரந்தெனிய யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் நன்றியுரையை ஆற்றினார், இது வரலாற்று மற்றும் கல்வி நிகழ்வின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி, கவச வாகன பிரிகேட் தளபதி, 22 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி, இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி, 22 வது காலாட் படைப்பிரிவின் பிரிகேட் தளபதிகள், 4வது இராணுவ கவச வாகனப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.