Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th April 2024 17:35:10 Hours

4 வது இலங்கை கவச வாகன படையணியில் புதிய தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அரங்கு அங்குரார்ப்பணம்

4 வது இலங்கை கவச வாகன படையணியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடம் மற்றும் தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அரங்கு 2024 ஏப்ரல் 02 அன்று கிளப்பன்பேர்க் வளாகத்தில் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

புதிய கேட்போர் கூடத்தில் 4 வது இலங்கை கவச வாகன படையணி படையினர் மற்றும் பல்வேறு முப்படைகளின் ஸ்தாபனங்களில் இருந்து வருகை தரும் பிரதிநிதிகளுக்கு வசதியான பயிற்சி சூழலை வழங்கும். இந்த அரங்கத்தில் 200 பேர் அமரக்கூடிய வசதியும் உள்ளது.

தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அரங்கில் செயல்பாட்டு வரலாறு பகுதி, முழு வசதியுடன் கூடிய மாதிரி அறை மற்றும் செயல்பாட்டு செயல்பாடு பகுதி ஆகியவை உள்ளன. 4 வது இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன் கேணல் டிஎம்வீஎம்ஆர் திசாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இராணுவத்தின் எதிர்கால சந்ததியினர் கடினமாக சம்பாதித்த அறிவு மற்றும் அனுபவங்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக இத்தகைய முக்கியமான சொத்தை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை படைத் தளபதி படையினருக்கான தனது உரையின் போது எடுத்துரைத்தார்.

இந் நிகழ்வில் இலங்கை கவச வாகன படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்