Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th March 2021 12:10:06 Hours

381 புதியவர்கள் இராணுவத்தில் இணைந்தனர்

திருகோணமலை - கிளாப்பன்பர்க்கில் உள்ள 4 வது கவச வாகன படையணியின் ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்தில் ஆட்சேர்ப்பு பாடநெறி எண் 29 இன் கீழ் பயிற்சியளிக்கப்பட்ட 381 பேர் செவ்வாய்க்கிழமை (23) நான்கு மாத கால அடிப்படை பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பிரியாவிடை அணிவகுப்புடன் சேவைக்காக புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட 22 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இதன்போது சாதாரன படைவீரர் கே.கே.டி.எல் சந்தருவான் சிறந்த உடற் தகைமை கொண்டவராகவும், சிறந்த குறிபார்த்து சுடும் விருதை சாதாரன படைவீரர் கே.ஜி.வி.சி ஷாமிகவும் , சாதாரண படைவீரர் எம்.பி.எல் குணவர்தன சிறந்த பயிலுனருக்கான விருதையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகளும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். buy footwear | Men's Footwear