28th February 2024 16:00:30 Hours
பயிற்சி பணிப்பகம் மற்றும் விளையாட்டு பணிப்பகம் ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ் ஆட்சேர்ப்பு பயிற்சி நிலையத்தின் மேற்பார்வையின் கீழ் இராணுவ விளையாட்டு வீரர்களின் குழு ஒன்று செவ்வாய்கிழமை (பெப்ரவரி 27) ஒருமாத ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறியை வெற்றிகரமாக முடித்தது.
அதன்படி, 10 படையணிகள் மற்றும் 08 இராணுவ விளையாட்டுக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 38 பங்கேற்பாளர்கள் இராணுவ விளையாட்டு கிராமம் மற்றும் ஆட்சேர்ப்பு பயிற்சி நிலையத்தின் பயிற்றுவிப்பாளர்கள் பாடநெறியை நடத்தினர். விளையாட்டுப் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.ஏ.டி.கொடேவத்த ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார்.
விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்களும் கலந்து கொண்டனர்.